Machine Learning in Tamil
இயந்திர வழி கற்றல்

Machine Learning in Tamil udemy course
இயந்திர வழி கற்றல்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது மனிதர்களைப் போல சிந்தித்து செயல் படக் கூடிய ஒரு மென் பொருள் (software) ஆகும். எந்திரன் படத்தில் வரும் சிட்டி கதா பாத்திரம் மாதிரி என்று கூட வைத்து கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவின் ஒரு உட்புரிவு தான் இயந்திர வழி கற்றல் (Machine Learning).
இயந்திர வழி கற்றலின் வாயிலாகத் தான் செயற்கை நுண்ணறிவை நாம் பயன் படுத்த முடியும்.
இயந்திர வழி கற்றல் தொழில் நுட்பத்தின் வாயிலாக, இப்போது நோய்களைக் முன் கூட்டியே கண்டறிவது (disease prediction), கடனை நேரத்தில் கட்டத் தவறியவர்களை முன் கூட்டியே அறிந்து கொள்வது (defaulters prediction) மற்றும் ஒரு பொருளின் எதிர்கால விற்பனையை (sales forecasting) முன் கூட்டியே அறிந்து கொள்வது ஆகியன சாத்தியமாகி உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில், இயந்திர வழி கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய விளக்கங்களை நீங்கள் தமிழில் கற்றுக் கொள்ளலாம். இந்த கோட்பாடுகளை (concepts) நிஜ வாழ்க்கையில் எவ்வாறு பயன் படுத்துவது என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் கூகிளின் கிளவுட் அடிப்படையில் பயிற்சி அளிக்கப் படுகிறது. கூகிளின் கோலப் (Google Colab) என்ற தொழில் நுட்பம் பயன்படுத்த படுகிறது.
இயந்திர வழி கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள் இப்பொழுது அதிகம் உள்ளது. இத்தகைய வேலைகளுக்கு அதிக சம்பளமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த பயிற்சிக்கு Python programming பற்றிய புரிதல் ஓரளவாது இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில், மேற் பார்வை கற்றல் (supervised learning) மற்றும் மேற் பார்வை அற்ற கற்றல் (unsupervised learning) என இரண்டும் விளக்கப்படும்.
இந்த தொழில் நுட்பம் பற்றிய விளக்கங்களை ஒரு தொழில் துறை நிபுணரால் கற்பிக்கப் படுகிறது. அவர் தனது பரந்த அனுபவத்தையும் நடைமுறை நுண்ணறிவுகளையும் இந்த பாடத் திட்டத்தில் எடுத்துக் காட்டுகள் மற்றும் வழக்கு ஆய்வுகள் (examples and case studies) மூலம் விளக்குவார்.